கற்காடு

நன்றி குங்குமம் முத்தாரம்

சீனா என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பெருஞ்சுவர் தான். ஆனால், சுற்றுலாவையே தங்களின் வாழ்க்கையாக தரித்துக் கொண்டவர்களைக் கேட்டால் கற்காடு என்று சொல்வார்கள். அந்தளவுக்கு சீனாவில் முக்கியமான ஓர் இடம் கற்காடு. சுமார் 27 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்தக் காட்டில் மரங்களைப் போல சுண்ணாம்புக் கற்கள் முளைத்திருக்கின்றன. அந்தக் கற்களுக்கு நடுவில் மரங்களும், சின்னச் சின்ன ஓடைகளும் சேர்ந்து காட்டை அலங்கரிக்கின்றன. சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இதன் அழகை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கே படையெடுக்கின்றனர்.

Related Stories: