எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியாவுக்கு 4,600 கோடி இழப்பு

புதுடெல்லி: எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால், ஏர் இந்தியாவுக்கு 4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், இழப்பில் இருந்து மீள்வதற்கு போராடி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2018-19 நிதியாண்டில் இந்த நிறுவனத்துக்கு இயக்க செலவாக மட்டும் 4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து இந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 2018-19 நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 26,400 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் இயக்க செலவாக மட்டும் 4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிகர இழப்பு 8,400 கோடியாக உள்ளது. இதற்கு எரிபொருள் விலை உயர்வும், அந்நிய செலாவணி இழப்பும்தான் முக்கிய காரணம்.இதுதவிர, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சுமார் 175 கோடி முதல் 200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பாலக்கோட் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் வான் எல்லையில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையால் இந்த இழப்பு நேர்ந்துள்ளது. 4 மாதங்களில் இந்த இழப்பு 430 கோடியை எட்டியுள்ளது. ஆனால், இந்த ஆண்டில் இயக்க லாபம் 800 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

Related Stories: