கிடார் மீன்

கடல் வாழ் உயிரினங்களில் மிக அருகிவரும் நிலையில் இருப்பது கிடார் மீன்தான். கிழக்கு அட்லாண்டிக் கடலைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த மீன்கள் கிடாரைப் போல தோற்றமுடையவை. அதனாலேயே இதற்கு அந்தப் பெயர். உணவு மற்றும் மருத்துவ குணங்களுக்காக இந்தமீன் வேட்டையாடப்படுகிறது.

இருபதாயிரத்துக்கும் குறைவான மீன்களே இப்போது எஞ்சியுள்ளன. அவையும் அழியும் நிலையில் உள்ளதுதான் சோகம். சர்வதேச இயற்கை பாதுகாப்பு மையம் அழிந்து வரும் உயிரினங்களைப் பற்றிய பட்டியலை சமீபத்தில் தயாரித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் வகையான உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளதாக அது கணக்கிட்டுள்ளது. இந்த அழிவுக்கு மூல காரணம் மனிதச் செயல்பாடுகள் என்பது பெரும் அவலம்.

Related Stories: