திண்டுக்கல்லில் ரூ.8 லட்சம் பாலித்தீன் பைகள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் இன்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தி ரூ.8 லட்சம் மதிப்பிலான பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபைகள் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் இன்னும் புழக்கத்தில் உள்ளன. மேலும் இரவு நேரங்களில் கேரிபைகள்  தயாரிக்கும் கம்பெனிகள் இயங்குவதாகவும் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கு திண்டுக்கல்-பழநி சாலையில் உள்ள முருகபவனம் பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இங்குள்ள ஒரு குடோனில், கேரிபைகள் தயாரிக்கும் கம்பெனி இயங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுகாதார ஆய்வாளர்கள் ரூ.8 லட்சம் மதிப்பிலான கேரிபைகளை பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் முருகையா, செபாஸ்டின், பாலமுருகன், கேசவன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Related Stories: