கோவில்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மூலம் உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டார். இவ்விழாவை முன்னிட்டு அங்கன்வாடி பணியாளர்களுக்கு வினாடி வினா போட்டியும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு  ஓவியப்போட்டி, ஊட்டசத்து தொடர்பான சமையல் செயல்முறை விளக்க போட்டி, ஆரோக்கியமான குழந்தைகள் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் 17 பேருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசு வழங்கினார்.

மேலும், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மத்திய சுகாதாரம மற்றும் குடும்ப நல அமைச்சகம், என்.கியூ.ஏ.எஸ். மூலம் தேசிய தரச்சான்றிதழ் மற்றும் ரூ.24.09 லட்சம் பரிசு பெறப்பட்ட சான்றிதழை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெறப்பட்டது. பிடிஓக்கள் மாணிக்கவாசகம், கிரி, தூய்மை பாரத இயக்க மாவட்ட முதன்மை அலுவலர் அதிசயமணி, அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், போடுசாமி, ராசையா, ஆபிரகாம் அய்யாத்துரை, வேலுமணி, ரத்தினவேல், ரத்தினராஜ், செண்பகமூர்த்தி, மகேஷ்குமார், அன்புராஜ், துறையூர் கணேஷ்பாண்டியன், வெள்ளத்துரை, அருணாசலசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கோவில்பட்டி  அருகே சிதம்பராபுரம் மற்றும் நாலாட்டின்புதூரில் உள்ள குளங்களை ஜல்சக்தி  அபியான் திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணிகளையும்,

சிதம்பரபுரம் கிராமத்தில்  உள்ள கண்மாயை குடிமராமத்து திட்டத்தின்கீழ் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற  உள்ள தூர்வாரும் பணியையும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்  ராஜூ துவக்கிவைத்தார். மேலும் கோவில்பட்டி அருகே பன்னீர்குளம்  கூட்டுபண்ணை விலக்கில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சத்தில்  புதிதாகக் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, இனாம் மணியாச்சி பஞ்சாயத்து  லட்சுமில் காலனியில் ஒன்றிய பொதுநிதியின் கீழ் ரூ.1.50 லட்சத்தில்  போர்வெல்லுடன் கூடிய சிறு குடிநீர் தொட்டி, கோவில்பட்டி-  இளையரசனேந்தல்ரோட்டில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சத்தில்  புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

Related Stories: