ஈரோடு மாவட்டத்தில் 11 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவத்தின் பல நிலைகளுக்கான ஆள் சேர்ப்பு முகாம் செப்டம்பர் மாதம் 2 -ம் தேதி வரை நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கி காலை 7.30 மணி வரை நடைபெறும். ஈரோடு, கோயம்புத்தூர்,மதுரை, சேலம், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் கணினி மூலம் சரிபார்க்கப்பட்டு தேர்வானவர்களுக்கு இந்த முகாமில் கலந்து கொள்வதற்கான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் தேர்வில் கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 600 இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசோதிக்கப்பட்டு ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், புல் அப்ஸ், வளைவான கம்பியில் நடத்தல், குழி தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வானவர்களுக்கு அவர்களுக்கான எண்ணும், ராணுவ முத்திரையும் நெஞ்சில் குத்தப்பட்டது. மேலும் கைவிரல் ரேகை, புகைப்படங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு மருத்துவத் தேர்வும் நடைபெற்றது. இதில் தேர்வானவர்கள் அடுத்த கட்டமாக எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளனர்.

Related Stories: