ப. சிதம்பரத்திற்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது : சிபிஐ தரப்பு வாதம்

டெல்லி: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளனர். ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

ப. சிதம்பரம் நேற்று அதிரடியாக கைது

பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு அதிரடியாக கைது செய்தது. 27 மணி நேர தலைமறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சிபிஐ தலைமை அலுவலகத்தில் உள்ள தரைதளம் மற்றும் 4வது தள அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது, பொருளாதார குற்றப்பிரிவினர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற கூண்டில் ஏற்றப்பட்டார் ப.சிதம்பரம்.ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கியது. சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா தனது வாதத்தை தொடங்கினார். ப.சிதம்பரத்துக்கு வழக்கில் உள்ள தொடர்பு குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

 

சிபிஐ தரப்பு : அமைதியாக இருப்பது அரசியல் சாசன உரிமை.ஆனால் சிதம்பரம் அமைதியாக இருந்து அனைத்து கேள்விகளையும் தவிர்த்து வருகிறார்.அந்த கேள்விகளுக்கு அவர் மட்டுமே பதிலளிக்க முடியும்.

சிபிஐ தரப்பு : வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை.

சிபிஐ தரப்பு : பேசாமல் இருப்பது அவருக்கான சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் வழக்கில் அவ்வாறு இருக்க முடியாது.

சிபிஐ தரப்பு : ப. சிதம்பரத்திற்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ தரப்பு : வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் ப. சிதம்பரத்தை ஆஜர்படுத்தியுள்ளோம்.

சிபிஐ தரப்பு : விசாரணைக்கு ப. சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை.ஆதாலால் ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சிபிஐ தரப்பு : எனவே ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்.

சிபிஐ தரப்பு : ஐ. என்.எக்ஸ் மீடியா முறையீடு தொடர்பான கூட்டுச் சதியில் சிதம்பரத்திற்கு பங்கு உள்ளது.  

சிபிஐ தரப்பு : ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

சிபிஐ தரப்பு : ப. சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

சிபிஐ தரப்பு :ஆவணங்களின் அடிப்படையில் சிதம்பரத்திடமும், மற்றவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது.

சிபிஐ தரப்பு :பண மோசடிக்கு இது சரியான முன் உதாரண வழக்கு என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சிபிஐ தரப்பு :விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தர மறுக்கிறார் சிதம்பரம்.

சிபிஐ தரப்பு :காவலில் இருக்கும் போது தான் சில கேள்விகளுக்கு பதிலை பெற முடியும்.

சிபிஐ தரப்பு :குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் சிடி எனப்படும் வழக்கு விபரங்களை பதிவு செய்கிறோம்

சிபிஐ தரப்பு : ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை.

சிபிஐ தரப்பு : குற்றப்பத்திரிகையில் ப. சிதம்பரம் பெயரை சேர்ப்பதற்கான நடவடிக்கையில் மும்முரமாக உள்ளோம்.

சிபிஐ தரப்பு : ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பது மிக மிக அவசியமான ஒன்று என்று தெரிவித்த நிலையில் வாதத்தை நிறைவு செய்தது சிபிஐ.

Related Stories: