ஸ்மைலியின் விலை 45 டாலர்!

நன்றி குங்குமம்

இன்று உலகம் முழுவதும் புன்னகையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த மக்களுக்கு இருக்கும் ஒரே மொழி ‘ஸ்மைலி’தான். டிஜிட்டல் உலகில் ஸ்மைலியை அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இதை உருவாக்கியவர் ஹார்வி ராஸ் பால்.அமெரிக்காவில் பிறந்த ஹார்வி விளம்பர நிறுவனங்களுக்கு ஓவியம் வரைகிற வேலையைச் செய்து வந்தார்.

1963-இல் ஓர் இன்சூரன்ஸ் நிறுவனம் ஹார்வியிடம் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையேயுள்ள உறவையும், வாடிக்கையாளர்களின் மத்தியில் மன உறுதியையும் வெளிப்படுத்துகிற மாதிரி ஒரு ஓவியத்தை வரையச் சொல்லிக் கேட்டனர். 10 நிமிடங்களில் ஒரு ஓவியத்தை வரைந்து கொடுத்தார். அது எல்லோரையும் கவர்ந்துவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக இருந்த எல்லா இடங்களையும் அலங்கரித்த அந்த ஓவியம் தான் ‘ஸ்மைலி’. இதற்காக ஹார்விக்குக் கிடைத்த தொகை வெறும் 45 டாலர். ஸ்மைலிக்கான விற்பனை உரிமை, காப்புரிமை என்று எதனையும் ஹார்வி வாங்கவில்லை என்பது இதில் ஹைலைட்.

Related Stories: