வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ‘நாபே’ என்ற பொருளாதார ஆய்வு அமைப்பு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பொருளாதார ெகாள்கையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இன்னொரு பக்கம் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. மேலும், சீனாவுடன் வர்த்தக போர் நடத்துவது தேவையற்ற பொருளாதார குழப்ப சூழ்நிலையை அதிகரிக்கும்.