73 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியை போலவே உள்ள 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

வாஷிங்டன் : பூமியை போலவே உள்ள 3 புதிய கிரகங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத் தகுந்த அளவிற்கு இந்த 3 கிரகங்களிலும் தட்பவெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனை நேரடியாக சுற்றி வரும் புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய 4 கோள்களை ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பியா மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையங்கள் ஈடுபட்டு வருகின்றன.

சூரிய குடும்பத்திற்கு வெளியே மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்ட நாசா அதற்காக டெஸ் எனப்படும் வெளிக்கோள்களை ஆய்வு செய்யும் செயற்கைக் கோளை கடந்த ஆண்டு விண்ணிற்கு அனுப்பியது. ஓராண்டு ஆய்விற்கு பிறகு பூமியை போன்று புதிதாக 3 கிரகங்கள் இருப்பதை இந்த செயற்கை கோள்கள் கண்டுபிடித்துள்ளது.  TOI-270 B, C,D என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகங்கள் பூமியின் அளவை விட 3. 5 எடை அளவு அதிகம் கொண்டது என தெரியவந்துள்ளது. மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத்தகுந்த  அளவிற்கு இந்த 3 கிரகங்களிலும் தட்ப வெப்பம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த செயற்கைகோள் மூலம் வானம் போன்ற படலங்கள் தென்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் 3 கிரகங்களில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை காண முடிகிறது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கிரகங்களின் மேற்பரப்பு தண்ணீர் இருக்கும் அளவிற்கு குளிர்ச்சியாக இருப்பதாகவும், ஹைட்ரொஜன், அமோனியா, ஹீலியம் போன்ற வாயுக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளன. வழக்கமாக பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என கணக்கிடப்பட்டு வரும் நிலையில், [பூமியை இந்த புதிய 3 கிரகங்கள் 3 முதல் 11 நாட்களில் சுற்றி வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர். பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த 3 கிரகங்கள் இருப்பதாகவும் இது குறித்து அடுத்தக்கட்ட ஆய்வுகள் நடைபெற உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: