ஆதாயம் தரும் பதவி எது? தீர்மானிக்க கூட்டுக்குழு: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: ஆதாயம் தரும் பதவி எது என்பதை தீர்மானிக்க கூட்டுக்குழு அமைப்பதற்கான தீர்மானம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.எம்பிக்கள் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பது பல்வேறு பிரச்னைகளை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் ஆதாயம் தரும் பதவி எது என்பதை நிர்ணயிப்பதற்கான கூட்டுக்குழு அமைப்பதற்கான தீர்மானத்தை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல்வாக்கெடுப்பு மூலம் நேற்று அவையில் நிறைவேற்றப்பட்டது.  இதன்படி  இந்த கூட்டுக்குழுவில் மக்களவை எம்பிக்கள் 10 பேரும், மாநிலங்களவையை சேர்ந்த 5 எம்பிக்களையும் கொண்டதாக இருக்கும்.  இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஆதாயம் தரும் பதவி எது என்பதை இந்த குழு தீர்மானிக்கும். மேலும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் ஆதாயம் தரும் பதவியை எம்பிக்கள் வகிப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்.

இது தவிர அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு 2 உறுப்பினர்களை ேதர்வு செய்வதற்கான மற்றொரு தீர்மானத்தை சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி சவுபே அவையில் கொண்டு வந்தார். இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மக்களவை எம்பிக்கள் இருவர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உறுப்பினர்களாக பணியாற்றலாம்.

Related Stories: