2வது நாளாக திட்டமிட்ட வேகத்தில் புவிவட்டப்பாதையில் சுற்றும் சந்திரயான்-2 விண்கலம்

சென்னை: நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ள சந்திராயன்-2 விண்கலம் 2வது நாளாக நேற்று திட்டமிட்ட வேகத்தில் அதன் புவிவட்டப்பாதையில் சுற்றி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் *ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கூடுதலாகவே சந்திரயான்-2 விண்கலத்தை கொண்டு சேர்த்தது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இப்பணி மேலும் சுலபமாகியது. இந்தநிலையில், சந்திரயான்-2 விண்கலம் 23 நாட்கள் புவியின் சுற்றுவட்டப்பாதையில் புவியை சுற்றி வரும். அதன்படி, 2வது நாளாக நேற்று  சந்திரயான்-2 விண்கலம் அதன் புவியின் சுற்றுவட்டப்பாதையில் சீரான வேகத்தில் திட்டமிட்டப்படி சுற்றி வருவதாக இஸ்ரோ விஞ்ஞனிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரயான்-2 வின் செயல்பாட்டை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: