வருமான வரி அலுவலகத்தில் உதவி மையம்: கணக்கு தாக்கல் செய்ய ஆக.31 வரை அவகாசம்

சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது கணக்கு தாக்கல் செய்வோர் சந்தேகம் தீர்க்க சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. வருமான வரி ஆணையர் ரங்கராஜ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் அனைவரும் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம். சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமான வரி சேவை மையத்தில் வருமான வரி சேவை மையம் செயல்படுகிறது. இங்கு இ-பைலிங் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி பெறலாம். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியதாரர்கள் மட்டுமே காகிதம் மூலம் இந்த அலுவலகத்தில் கணக்கு தாக்கல் முடியும். அவர்களும் தேவைப்பட்டால் இ-பைலிங் செய்யலாம்.

நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 44 கோடியே 57 லட்சத்து 17,383 ேபர் பான் கார்டு வைத்துள்ளனர். 2018-19ம் ஆண்டில் தமிழகத்தில் 45 லட்சத்து 37 ஆயிரத்து 303 பேரும் புதுச்சேரியில் 97 ஆயிரத்து 833 பேரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் சேர்த்து 46 லட்சத்து 35 ஆயிரத்து 136 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 2018-19ம் நிதியாண்டில் தனி நபர் வருமானம் ₹5 லட்சத்துக்குள் இருந்தால், ஆகஸ்ட் 31 வரை கணக்கு தாக்கல் செய்தால் எந்தவித அபராதமும் கிடையாது.

2020 மார்ச் 31ம் தேதிக்குள் கட்டும் பட்சத்தில் ₹1,000 அபராதமாக விதிக்கப்படும். ₹5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்போர் வரும் ஜூலை 31ம் தேதிக்கு பின் டிசம்பர் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ₹5 ஆயிரமும், ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ₹10,000 அபராதம் சேர்த்து கட்ட வேண்டும். தனிநபர் வருமான வரம்பு ₹5 லட்சத்துக்கு மேல் இருந்தால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை எந்தவித அபராதமும் கிடையாது. ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31 வரை ₹5 ஆயிரமும், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை ₹10 ஆயிரமும் அபராதம் செலுத்த வேண்டும். 2020 மார்ச் 31ம் தேதிக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தாலும் இ-பைலிங் இணையதளம் அதை ஏற்றுக்ெகாள்ளாது. அந்த நபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவே கருதப்படும்.

அவர்களுக்கு வருமான வரி ஏய்ப்பு நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த ஆண்டு தமிழகம், புதுச்சேரியில் 92,500 கோடி வருமான வரி பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு அடுத்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கணக்கு தணிக்கைக்கு உட்படுத்த தேவையில்லாத தனிநபர்கள், மாத சம்பளதாரர்கள், நிறுவனத்தினர் 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை இந்த மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேற்கண்ட பிரிவினர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து நிதியமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories: