கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு மற்றும் 27 இணைப்பு கல்லூரிகள் உள்ளது. மொத்தம் 10 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு 2019-2020ம் ஆண்டில் அறிவியல் படிப்பில் 3,695 இடங்கள், தொழில்நுட்ப படிப்பில் 210 இடங்கள் என மொத்தம் 3,905 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம் கடந்த மே 8ம் தேதி துவங்கி ஜூன் 17ம் தேதியுடன் முடிந்தது. மொத்தம் 51,791 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.  இந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர், கடந்த 12ம் தேதி கலந்தாய்வு நடந்தது. இதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று தொடங்கியது. நாளை வரை நடக்கிறது. நேற்று ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

Related Stories: