சினிமாவை மிஞ்சம் வகையில் பைக்கில் வந்து பஸ்சை வழிமறித்து கல்லூரி மாணவர்களை சாலையில் ஓட ஓட வெட்டிய சக மாணவர்கள்

* பயணிகள், வாகன ஓட்டிகள் அலறி அடித்து ஓட்டம்

* 2 பேர் கைது: 2 பட்டாக்கத்திகள், பைக் பறிமுதல்

சென்னை: பஸ் ரூட் தல பிரச்னையால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் சிலர் பைக்கில் வந்து பேருந்தை வழிமறித்து சக மாணவர்களை சாலையில் ஓட ஓட விரட்டி சினிமா போல பட்டாக்கத்தியால் வெட்டிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பஸ் ரூட் பிரச்னையால் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, புதுக்கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி, போலீசார் கல்லூரி மாணவர்களிடையே பொது இடத்தில் தகராறில் ஈடுபடக் கூடாது, பொதுமக்களுக்கு தொந்தரவு செய்ய கூடாது, பொது சொத்துக்களை சேதப்படுத்த கூடாது மற்றும் பஸ் ரூட் மற்றும் பஸ் டே குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் சென்னையில் ரூட் தல பிரச்னை மற்றும் பஸ் டேவை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே நேற்று காலை கல்லூரிக்கு வரும் போது பூந்தமல்லியில் இருந்து வரும் மாணவர்களுக்கும், பிராட்வே பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கும் இடையே ரூட் தல பிரச்னை ஏற்பட்டது. இதில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நாங்கள் தான் ரூட் தல என்று ஒருவரை ஒருவர் கல்லூரி முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பூந்தமல்லி பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் பிராட்வே பகுதியில் இருந்து வரும் மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் பிராட்வே பகுதியில் இருந்து வரும் சீனியர் மாணவர்களிடம் சம்பவம் குறித்து தகவலை பாஸ் செய்தனர். இதையடுத்து நேற்று மதியம் கல்லூரி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு பேருந்து மூலம் சென்றனர். அப்போது, பூந்தமல்லி பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் பெரம்பூரில் இருந்து திருவேற்காடு செல்லும் 29இ பேருந்தில் ஏறி ெசன்றனர். பேருந்து அரும்பாக்கம்  மெகா மார்ட் ஷோரூம் அருகே வரும் போது, இரண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் வந்த பிராட்வே பகுதியில் இருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்தை நடுவழியிலேயே பட்டாக்கத்தி முனையில் வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுனர் சாலையில் நடுவழியிலேயே பேருந்தை நிறுத்தினர். அப்போது பட்டாக்கத்தியை சுழற்றியப்படி பேருந்தின் இரு வழிகளிலும் யாரும் இறங்காதபடி மறித்து ஏறினார். இதை பார்த்த பேருந்துக்குள் இருந்த சக மாணவர்கள் பேருந்தின் ஜன்னல் வழியாக தப்பி ஓட முயன்றனர். இதை பார்த்த எதிர்தரப்பு மாணவர்கள் தப்பி ஓட முயன்ற மாணவர்களை சுற்றி வளைத்து பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் சில மாணவர்கள் வெட்டு காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காப்பாத்துங்கள்.... காப்பாத்துங்கள் என்று கத்தியபடி ஓடினர். அப்போதும் ஆத்திரம் தீராத எதிர்தரப்பு மாணவர்கள், காலையில் சக மாணவர்களை தாக்கிய மாணவர்களை அடையாளம் கண்டு ஓட ஓட துரத்தி ெசன்று மடக்கி வெட்டினர்.  பிறகு பேருந்தின் ஜன்னல் மற்றும் ஏறும் மற்றும் இறங்கும் வழிகளில் பட்டாக்கத்தியால் வெட்டியபடி ‘எங்களை எதிர்த்தால் இதுதான் நடக்கும்’ என்று கூறியபடி சாலையில் பட்டாக்கத்திகளை பொறி பறக்க உராசி அச்சத்தை ஏற்படுத்தினர். இதில் பேருந்தில் இருந்த வயதானவர்கள் முதல் அனைத்து பயணிகளும் உயிர் பிழைத்தால் போதும் என்று தங்களது உடமைகளை விட்டுவிட்டு இறங்கி ஓடினர்.

சாலையில் நடந்ததால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடினர். 10 நிமிடங்கள் நடந்த இந்த சம்பவத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. ஒரு சிலர் அச்சத்துடன் அதிவேகமாக சம்பவ இடத்தை கடந்து ெசன்றனர். இந்த சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வரும் குன்றத்தூர் பகுதியை ேசர்ந்த வசந்தகுமார்(20) உட்பட 6க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதில் வசந்தகுமார் தலை மற்றும் உடலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். மற்றவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதை பார்த்த தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது பைக்குகளில் தப்பி ஓடினர். பிறகு உயிருக்கு போராடி வசந்தகுமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் வெட்டுக்காயங்கள் இருந்தால் டாக்டர்கள் பரிந்துரைப்படி ஸ்டான்லி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி ேகமரா பதிவுகளை பெற்றும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகாரின் படி தப்பி ஓடிய மாணவர்களை தேடி வருகின்றனர். மேலும், பைக்கில் தப்பி சென்றவர்களை பதிவு எண் மூலம் போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர்.  அதில் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மதன், சுருதி ஆகியோரை என கண்டுபிடித்து கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்திகள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 2 மாணவர்களிடம் தாக்குதல் நடத்தி தப்பி சென்ற 6 மாணவர்கள் யார் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 6 மாணவர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: