ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள பேட்டரி கார்கள் இன்று அறிமுகம்

சென்னை: ஹூண்டாய் கார் நிறுவனம் முதன்முதலாக மின்சார கார் தயாரிப்பை சென்னையில் தொடங்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி ரூ.2,000 கோடியை முதலீடு செய்து 10  லட்சம் இ-கார் எனப்படும் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் திட்டத்தை  வகுத்தது. புரிந்துணர்வு ஒப்பந்தப்படி ஹூண்டாய் நிறுவனம் பேட்டரி கார்களை தயாரித்துள்ளது. இந்த பேட்டரி கார்களை 7 மணி நேரம் தொடர்ந்து சார்ஜ் செய்தால் 452 கி.மீ. வரை ஓடும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உற்பத்தியாகும் இந்த கார்களுக்கு கோனா எஸ்யுவி என பெயரிடப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள பேட்டரி கார்களை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்.

Related Stories: