பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு: 92,153 வாக்குகள் பெற்றார்

லண்டன்: லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெரசா மே பதவி விலகியதை அடுத்து புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து பிரிந்து செல்லும், பிரெக்சிட் ஒப்பந்தத்தை இங்கிலாந்து எம்பிக்கள் ஏற்க மறுத்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் தெரசா மே, கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர்  மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. கன்சர்வேட்டிவ் கட்சியை பொறுத்தவரை கட்சி தலைவராக இருப் பவரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார்.

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் லண்டன் மேயர் போரீஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் ஜெராமி ஹன்ட் ஆகியோர் போட்டியிட்டனர்.  இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. கட்சியின் இணையதளத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனியன்று ஆன்லைன் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 1199 பேர் வாக்களித்தனர். இதில் போரீஸ் ஜான்சனுக்கு 75 சதவீத வாக்குகள் கிடைத்தது. கட்சியை சேர்ந்த உயர்மட்ட குழு உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தபால் ஓட்டுகள் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமையகத்தில் நேற்று காலை வழங்கப்பட்டது. நேற்று மாலை  5 மணியுடன்  தபால் வாக்குகளை பெறுவதற்கான நேரம் முடிவடைந்தது.

போரிஸ் ஜான்சன் பிரதமராக தேர்வு:

இந்த வாக்குகளே கட்சியின் புதிய தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும். வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின்  போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான, எம்.பி.,க்கள் ஓட்டெடுப்பு, நடந்தது. இதில் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக, 92,153 ஓட்டுகளும், ஜெர்மி ஹன்ட்டிற்கு ஆதரவாக 46,656 ஓட்டுகளும் கிடைத்தன.

Related Stories: