அடுக்குமாடி குடியிருப்பில் மாத பராமரிப்பு கட்டணம் எவ்வளவு இருந்தால் ஜிஎஸ்டி?

புதுடெல்லி: அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு பதிவுசெய்யப்பட்ட வீட்டு வசதி சங்கம் அல்லது குடியிருப்போர் நலச் சங்கம், மாத பராமரிப்பு கட்டணமாக 7,500க்கு மேல் வசூல் செய்தால், அந்த தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி வரிகள் தொடர்பான தமிழ்நாடு பிரிவு அதிகார ஆணையம் (டிஎன்ஏஏஆர்) தெரிவித்துள்ளது. புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் டிஎன்ஏஏஆர் ஆணையத்திடம் அளித்திருந்த மனுவில் ‘‘வீட்டின் உரிமையாளர் மாத பராமரிப்பு கட்டணம் 7,500க்கு  மேல் செலுத்தினால் அதற்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டுமா? அல்லது பராமரிப்பு  கட்டணம் முழுவதற்கும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா என்று விளக்கம் கேட்டிருந்தது.  அதற்கு டிஎன்ஏஏஆர் அளித்த விளக்கத்தில் பராமரிப்பு கட்டணம் முழுவதற்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. முன்பு மாத பராமரிப்பு கட்டணம் 5,000க்கு மேல் இருந்தால் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டது. ஆனால், 2018 ஜனவரி 25ம் தேதிக்கு பின்னர் பராமரிப்பு கட்டணம் 7,500க்கு மேல் இருந்தால் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: