வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வகை போட்டியிலும் விராத் கோஹ்லியே கேப்டனாக நீடிக்கிறார்.ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறிய இந்திய அணி, அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி செப்டம்பர் 4ம் தேதி வரை நடபெற உள்ள இந்த டூரில் இந்தியா 3 டி0, 3 ஒருநாள் மற்றும்  டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மும்பையில் நேற்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் வீரர்களைத் தேர்வு செய்தனர்.ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், 3 வகை போட்டிகளுக்கும் கோஹ்லியே கேப்டனாக நீடிக்கிறார். முன்னதாக, இந்த தொடரில் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

எனினும், உலக கோப்பை தோல்வியை அடுத்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் சவாலுக்கு கோஹ்லி ஓகே சொல்லி உள்ளார். நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒருநாள் மற்றும் டி0 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிக்கான அணியில் பூம்ரா இடம் பிடித்துள்ளார். உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மாவும் டெஸ்டில் விளையாட உள்ளார். அனுபவ வீரர் டோனி  மாதம் துணை ராணுவத்தில் பணிபுரிய முடிவு செய்துள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் தேர்வுக் குழு கூட்டத்தில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. டோனி இடம் பெறாத நிலையில், இளம் வீரர் ரிஷப் பன்ட் வசம் விக்கெட் கீப்பர் பொறுப்பு ஒப்படைப்படைக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் ரிசர்வ் விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹா இடம் பெற்றுள்ளார். இளம் வீரர்கள் ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, நவ்தீப் சாய்னி, கலீல் அகமது ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டி0 அணியில் புதுமுக வீரராக சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் இந்தியாவில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடக்க உள்ள தொடர் வரை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் துணை பயிற்சியாளர்களுக்கு ஏற்கனவே பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அணி

விராத் கோஹ்லி (கேப்டன்), அஜிங்க்யா ரகானே (துணை கேப்டன்), மயாங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், செதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரோகித் ஷர்மா, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பூம்ரா, உமேஷ் யாதவ்.

ஒருநாள் போட்டி அணி

விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சாய்னி.

டி0 அணி விராத் கோஹ்லி

(கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சாய்னி.

Related Stories: