போலீஸ் சேனல்

வசூலில் கை வைக்காதே சீறும் ஆர்ஐ டிரைவர்

மலைக்கோட்டை மாநகர் கன்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவில் இருந்த ஆர்ஐ பதவி உயர்வில் டிஎஸ்பியாக அரியலூருக்கு மாற்றப்பட்டார். இதனால் கடந்த 3 மாதமாக அந்த இடம் காலியாக இருந்தது. ஆர்ஐ நியமிக்கப்படாததால் அரியமங்கலம் ஆர்எஸ்ஐ வசூலில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார். லோடு ஆட்டோக்கள், லாரிகள் மூலம் கிடைக்கும் மாத தொகையை எவ்வித பிரச்னையும் இன்றி லபக்கினார். இந்நிலையில் புதிதாக ஆர்ஐ நியமிக்கப்பட்டபின்பும் மாத வசூல் தொகையை ஆர்எஸ்ஐயே வைத்துக்கொண்டார். இதனால் ஆர்ஐ டிரைவர் பங்கு தொகை கிடைக்காமல் பரிதவித்து வந்தார்.

இந்நிலையில் ஆர்எஸ்ஐயின் ரைட்டரிடம் (பைக் ஓட்டுபவர்) எங்களின் பங்கு தொகையை ஏன் கொடுக்கவில்லை என ஆர்ஐ டிரைவர் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது போக்குவரத்து போலீசாரை முகம் சுளிக்க வைத்துள்ளது.தற்போதைய ஆர்ஐயின் டிரைவர் இதற்கு முன் ரங்கம் இன்ஸ்பெக்டரின் டிரைவராக இருந்தார். அப்போது, பெண் அமைச்சரின் உறவினர் ஒருவர் காவிரியில் 7 மாட்டு வண்டியில் மணல் அள்ளி சென்றதை இன்ஸ்பெக்டர் கண்டறிந்து பறிமுதல் செய்தததை அவருக்கு தெரியாமல் 5 வண்டிகளை இவர்தான் விடுவித்தாராம். இதில் அப்பாவியான இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தன் மீது எதற்கு நடவடிக்கை என்பது தெரியாமல் அவர் தவிக்கிறாராம். இந்நிலையில் தற்போது இந்த ஆர்ஐ சிக்கி இருப்பதாக சக போலீசார் சிலாகித்து வருகின்றனர்.

பழைய ஸ்டேஷனுக்கு திரும்பி பணம் வசூலிக்கும் போலீசார்

சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகளவு நடந்து வருகிறது. இதுதவிர டாஸ்மாக் பார்கள் என மாவட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஸ்டேஷன்களில் சிறப்பு எஸ்ஐக்கள் பலர் ‘நாட்டாமை’, போல செயல்பட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக புகார்கள் கிளம்புகின்றன. இவர்கள் அனைவரும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அருகாமையில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு புதிதாக வெளிமாவட்டங்களில் இருந்து இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, சிறப்பு எஸ்ஐக்களாக வந்திருந்தவர்கள் மணல் கடத்தல், புறநகரில் இயங்கிவந்த பார்கள், கட்டப்பஞ்சாயத்துகளை ஒழித்தனர். இதனால் வருமானம் இழந்த ஆளுங்கட்சியினர், தேர்தல் முடிந்தபின் தங்களுக்கு வேண்டப்பட்ட சிறப்பு எஸ்ஐக்களை, தாங்கள் விரும்பிய ஸ்டேஷன்களுக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டனர்.

மீண்டும் ‘வசூல் மன்னர்கள்’ தங்கள் வேலையை காட்டத்துவங்கி விட்டனர். திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மானாமதுரை, சிப்காட், பூவந்தி, காரைக்குடி டவுன், சிவகங்கை டவுன், ரூரல் என பல போலீஸ் ஸ்டேஷன்களில் மணல் கொள்ளையர்களுடன் பல சிறப்பு எஸ்ஐக்கள், மாமா, மச்சான் உறவுமுறை சொல்லி மாமூலால் லட்சாதிபதியாகியுள்ளனர். சமூக விரோதிகளுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதால் மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளைகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கின்றனர். தென்மண்டல ஐஜி, கொஞ்சம் சிரத்தை எடுத்து மீண்டும் பணிக்குத் திரும்பி வசூலில் ஜொலிப்பவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

பெண் காக்கிகளிடம் எரிந்து விழும் எஸ்பி

திருவாரூர் மாவட்ட எஸ்பி கடும் கறார் பேர் வழி என்றாலும் உதவி செய்யாவிட்டாலும் உபத்ரவம் செய்யக்கூடாது என மாவட்ட காக்கிகள் கொந்தளிக்கின்றனர். காவலர்கள் பற்றாக்குறையாக உள்ள காவல் நிலையங்களில் பணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக உள்ளார். மேலும், இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்திற்கு மாதம் 80 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. இதில் பந்தோபஸ்து மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போது ஒதுக்கீடு செய்யப்படும் டீசல் போதுமானதாக இல்லை என கூறி கூடுதலாக டீசல் டோக்கன் கேட்கும் போது அதெல்லாம் முடியாது, ஒதுக்கீடு செய்த அளவிற்குள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என பொரிந்து தள்ளுகிறார். இதனால் மிரளும் இன்ஸ்பெக்டர்கள் வேறு வழியின்றி சொந்த செலவில் டீசல் நிரப்பி கொள்கின்றனர். எஸ்பி நினைத்தால் கூடுதல் ேடாக்கன் வழங்கலாம் ஆனால் வழங்க மறுத்து எரிந்து விழுகிறார். ஆண்கள் என்றில்லாமல் பெண் இன்ஸ்பெக்டர்களிடமும் இதே பாணியை தொடர்கிறார். இதை எல்லாம் எங்கே போய் கூறுவது என தெரியாமல் காக்கிகள் கைகளை பிசைந்து வருகின்றனர்.

பெண் காக்கிகளிடம் எரிந்து விழும் எஸ்பி

திருவாரூர் மாவட்ட எஸ்பி கடும் கறார் பேர் வழி என்றாலும் உதவி செய்யாவிட்டாலும் உபத்ரவம் செய்யக்கூடாது என மாவட்ட காக்கிகள் கொந்தளிக்கின்றனர். காவலர்கள் பற்றாக்குறையாக உள்ள காவல் நிலையங்களில் பணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக உள்ளார். மேலும், இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்திற்கு மாதம் 80 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. இதில் பந்தோபஸ்து மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போது ஒதுக்கீடு செய்யப்படும் டீசல் போதுமானதாக இல்லை என கூறி கூடுதலாக டீசல் டோக்கன் கேட்கும் போது அதெல்லாம் முடியாது, ஒதுக்கீடு செய்த அளவிற்குள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என பொரிந்து தள்ளுகிறார். இதனால் மிரளும் இன்ஸ்பெக்டர்கள் வேறு வழியின்றி சொந்த செலவில் டீசல் நிரப்பி கொள்கின்றனர். எஸ்பி நினைத்தால் கூடுதல் ேடாக்கன் வழங்கலாம் ஆனால் வழங்க மறுத்து எரிந்து விழுகிறார். ஆண்கள் என்றில்லாமல் பெண் இன்ஸ்பெக்டர்களிடமும் இதே பாணியை தொடர்கிறார். இதை எல்லாம் எங்கே போய் கூறுவது என தெரியாமல் காக்கிகள் கைகளை பிசைந்து வருகின்றனர்.

கரன்சி இருந்தால் காவல் நிலையம் வா

குமரி மாவட்ட காவல் நிலையங்களில் வசூல் வேட்டைக்காக போலீசார், இப்போது புதுவித டெக்னிக்கை கையாள்கிறார்கள். காவல் நிலையங்களுக்கு புகாருடன் வருபவர்களிடம் எதுவும் தேறவில்லை என்றால், நேராக எதிர்மனுதாரர்களை வளைக்கிறார்கள். அவர்களிடம் பேசி, நீங்கள் முதலில் புகார் கொடுங்கள். நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கூறி ஆயிரக்கணக்கில் பேரம் பேசி முடிக்கிறார்கள். இவ்வாறாக பல புகார்தாரர்கள், குற்றவாளியாக்கப்பட்டு இப்போது வழக்கை சந்தித்து வருகிறார்களாம். சமீபத்தில் கருங்கல் பகுதியை சேர்ந்த நகைகடை உரிமையாளர் ஒருவர், தன்னை மிரட்டிய ரவுடி கும்பல் பற்றி புகார் அளித்துள்ளார். 2 நாட்கள் கழித்து கருங்கல் காவல் நிலையத்தில் இருந்து பேசிய போலீசார், நகை கடைக்காரரிடம் உங்கள் மீது புகார் வந்துள்ளது.

உடனடியாக காவல் நிலையம் வாருங்கள் என அழைத்துள்ளனர். பதறி அடித்து போய் வியாபாரிகள் சங்கத்தினருடன் எஸ்.பி. நாத்தை சந்தித்து கதறி உள்ளார். எஸ்.பி. தலையிட்ட பிறகு, நகை கடைக்காரர் அளித்த புகார் மீது கருங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பல தகிடுதத்த வேலைகள் காவல் நிலையங்களில் அரங்கேறுகின்றன. புகார்தாரரோ, எதிர்மனுதாரரோ கரன்சி இருந்தால் மட்டும் காவல் நிலையத்துக்கு வாருங்கள் என எழுதாத குறையாக காவல் நிலையங்கள் உள்ளன என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாமூல், கந்து வட்டி வசூலுக்கு புரோக்கர்

கந்து வட்டிக்காரர்களை பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்த நிலை மாறி, குமரி மாவட்டத்தில் காவல்துறையில் உள்ளவர்களே கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் சிலர், நேரடியாக கொடுத்தால் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் புரோக்கர்களை வைத்து கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். ஒரு புறம் கந்து வட்டி வசூல், மறுபுறம் மாமூல் வசூல் வேட்டை என சில காவலர்களும் கொண்டாட்டமாக இருக்கிறார்களாம். இவற்றையெல்லாம் எஸ்.பி.யின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியவர்களே கறை படிந்த கரங்களுடன் இருப்பதால், அவர்களும் தங்களது பங்கிற்கு செய்ய வேண்டியதை செய்து வருகிறார்களாம். மொத்தத்தில் கந்து வட்டி வசூல், மாமூல் வேட்டையில் சில காவல் நிலையங்கள் திக்குமுக்காடி வருவதாக பேசிக்கொள்கிறார்கள்.

கடமையை மறந்ததால் கம்பி எண்ணும் காக்கிகள்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்குவதற்கு வசதியாக ஏராளமான லாட்ஜ்கள், ரிசார்ட்கள் உள்ளன. இதை பயன்படுத்தி பாலியல் தொழிலும், இதற்கான புரோக்கர்களும் அங்கு கொட்டமடிக்கின்றனர். குற்றால சீசன் பணிக்காக நெல்லையில் இருந்து ஆயுதப்படை காவலர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருவிக்கரை, பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ‘ஷிப்ட்’ அடிப்படையில் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள லாட்ஜில் பாலியல் தொழில் நடப்பதாக தகவல் கிடைத்தது.

சீசன் பணிக்காக வந்த இரு ஆயுதப்படை காவலர்கள் அங்கு சென்றனர். அவர்கள் தங்கள் கடமையை மறந்து  ஓசியில் அனுபவித்ததுடன் அவர்களிடம் இருந்த பணத்தையும் கறந்து விட்டனர். தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கடமை தவறிய காவலர்கள் இப்போது கம்பி எண்ணுகிறார்களாம். பாதுகாப்பிற்கு செல்லும் காவலர்களே அத்துமீறுவதால் லாட்ஜ்களில் தங்கும் சுற்றுலா பயணிகள் அச்சப்படுகின்றனர்.

ஆளை விடுங்க சாமீ... ெதறிக்க விடும் எஸ்.பி!

ஈரோடு வழியாக சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில், பெண் பயணிகளை குறிவைத்து கடந்த மாதம் நகை பறிப்பு நடந்தது. தொடர்ச்சியாக நடந்த இந்த குற்றச்ெசயலை தடுக்க, ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாவேலிபாளையம், வீரபாண்டி, காவிரி ஆர்எஸ் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன், வேலூர் பட்டாலியன் போலீசில் இருந்து 100 போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு தினமும் வேலூர் பட்டாலியன் எஸ்.பி., பணி உத்தரவு பிறப்பித்து வருகிறார். தனித்தனி குழுவாக பிரிந்து, ரயில் கொள்ளை நடந்த பகுதியில் நைட் டூட்டி பார்க்க உத்தரவிடுகிறார். தினமும் 10 கி.மீ தூரம் தண்டவாளம் வழியாக நடந்துசென்று சுற்றுவட்டாரத்தில் சந்தேகப்படும்படியான நபர்களை பிடிக்கவேண்டும் என்பதும் இவரது உத்தரவு. இதை ஏற்று, பட்டாலியன் போலீசார் தினமும் ரயில் தண்டவாளம் வழியாக 10 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு, கண்காணித்து வருகின்றனர். எஸ்.பி. நம்மள இப்படி நடக்க விடுறாரே...? என புலம்பியபடி பட்டாலியன் போலீசார் குமுறுகின்றனர். இந்த டார்ச்சர் தாங்காமல், தினமும் 5 முதல் 10 பட்டாலியன் போலீசார் மருத்துவ விடுப்பில் சென்றுவிடுகின்றனர். ‘’ஆளை விடுங்க சாமீ... தப்பித்தால் போதும்...’’ என ஓட்டம் எடுக்க இன்னும் பலர் காத்திருக்கின்றனர்.

Related Stories: