நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் 72 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி

வி.கே.புரம்: நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் காரையாறு சின்னமயிலாறு காணியின குடியிருப்பில் உள்ள 48 வீடுகளுக்கு இதுவரை மின்வசதி வழங்கப்படவில்லை. இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும், வன விலங்குகள் உள்ள பகுதி என்பதாலும் மின்சாரம் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. தற்போது மத்திய, மாநில அரசுகள் சின்னமயிலாறு காணியின குடியிருப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று மின்சார வசதி செய்ய உத்தரவிட்டுள்ளன.

வனத்துறை நிதி உதவியுடன் அப்பகுதியில் உள்ள 48 வீடுகளுக்கு நேற்று முன்தினம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.  சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி கிடைத்திருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: