38 மக்களவை தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள் முழு விவரம்

சென்னை: 38 மக்களவை ெதாகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள் முழு விவரம் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 37 தொகுதிகளில் மெகா வெற்றி பெற்றது. இதில் திமுக 23 தொகுதியில் போட்டியிட்டு 1 கோடியே 38 லட்சத்து 77 ஆயிரத்து 622 வாக்குகளை  பெற்றுள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 54 லட்சத்து 5674 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டு 10 லட்சத்து 31 ஆயிரத்து 617 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில்  போட்டியிட்டு 10 லட்சத்து 18,225 வாக்குகளை பெற்றுள்ளது. அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட்டு 5 லட்சத்து 229 வாக்குகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஒரு ெதாகுதியில் போட்டியிட்டு 4  லட்சத்து 69 ஆயிரத்து 943 வாக்குகளை பெற்றுள்ளது.

மொத்தம் திமுக தலைமையிலான கூட்டணி 2 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக 21 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த கட்சி 78 லட்சத்து 30 ஆயிரத்து 520  வாக்குகளை பெற்றுள்ளது. பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டு 22 லட்சத்து 97 ஆயிரத்து 431 வாக்குகளும், பாஜக 5 தொகுதியில் போட்டியிட்டு 15 லட்சத்து 51,924 வாக்குகளும், தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிட்டு 9 லட்சத்து 29,590  வாக்குகளும், தமாகா 1 தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து 20,849 வாக்குகளும் பெற்றுள்ளது. மொத்தம் இந்த கூட்டணி 1 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 314 வாக்குகள் பெற்றுள்ளது. இதே போல அமமுக 21 லட்சத்து 85,243 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 16 லட்சத்து 47,185 வாக்குகளும் மக்கள் நீதி மய்யம் 15 லட்சத்து 75,620 வாக்குகளும், மற்றவர்கள் 12 லட்சத்து 58,035 வாக்குகளும், நோட்டோ 5 லட்சத்து 27,014 வாக்குகளும்  பெற்றுள்ளது. மொத்தம் பிற கட்சிகள் 71 லட்சத்து 93,097 வாக்குகள் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 4 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 721 வாக்குகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: