சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ், பாஜ பிரிவினை செய்வதை கைவிட வேண்டும் : டி.கே.ரங்கராஜன் எம்பி வேண்டுகோள்

சென்னை: ஜாதி, மதத்தின் பெயரால் பிரிவினை செய்யக்கூடிய கொள்கைகளை பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். கைவிடவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு பள்ளிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில், சங்க செயலாளர் மாரியப்பன் தலைமையில் மே 25 முதல் 31 வரை 1500 கிலோ மீட்டர் மிதி வண்டி பிரசாரத்தை நேற்று தாம்பரம்,  சண்முகம் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதில், இயக்குநர் பா.ரஞ்சித், பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி, பள்ளி மாணவர்கள் உட்பட  ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தங்களின் 8 அம்ச கோரிக்கைகளான வலியுறுத்தி பேசினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி  ரங்கராஜன் கூறியதாவது:பாஜ இரண்டாவது முறை ஆட்சியை ஏற்று இருக்கிறது. ஆகவே இந்த அரசு எப்படி ஆட்சி செய்ய போகிறது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். கடந்த முறையை விட கூடுதலான பலத்துடன் பாஜ அரசு இருக்கிறது. இந்த நாட்டில்  ஏராளமான மதங்கள் இருக்கிறது. 2000 ஆண்டு காலமாக இருக்கக்கூடிய பழமையான மதங்கள் இருக்கக்கூடிய ஒரு நாடு. உலகமே போற்றக்கூடிய ஒரு நாடு இந்தியா.அப்படி ஒற்றுமையாக வாழக்கூடிய மக்கள் மத்தியில் மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் பிரிவினை செய்யக்கூடிய கொள்கைகளை பாரதிய ஜனதா அரசு தவிர்க்க வேண்டும். அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தவிர்க்க வேண்டும்’’  என தெரிவித்தார்.

Related Stories: