அதிமுக வேட்பாளர்களிலேயே குறைந்த ஓட்டு வாங்கிய தம்பிதுரை

சென்னை: தமிழகத்தில் போட்டியிட்ட 19 அதிமுக வேட்பாளர்களில் மிக குறைந்த ஓட்டு கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வாங்கியது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 39 இடங்களில் போட்டியிட்டன. இதில் வேலூர் தொகுதி மட்டும் தேர்தல் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 38 இடங்களில் அதிமுக மட்டும் 19 இடங்களில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். கூட்டணி கட்சிகள்  போட்டியிட்ட 19 இடங்களிலும் தோல்வி அடைந்தது.

இதில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட 17 தொகுதிகளிலும் குறைந்தபட்சமாக 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வாங்கி தோல்வி அடைந்துள்ளனர். ஆனால் கரூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 2,75,151  வாக்குகள் வாங்கி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் தோல்வி அடைந்தார். ஜோதிமணி 6,95,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி வித்தியாசம் 4,20,546 ஆகும். அதன்படி, அதிமுக வேட்பாளர்களிலேயே குறைந்த அளவு  ஓட்டு பெற்றது முன்னாள் அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரைதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Related Stories: