தமிழ்முரசு செய்தி எதிரொலி கழிவுநீரோடை சீரமைப்பு: குழித்துறை நகராட்சி அதிரடி

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் காளைச்சந்தை பஸ் நிலையம் அருகே கருங்கல் செல்லும் சாலையின் வலது பக்கத்தில் கழிவுநீர் ஓடை உள்ளது.

ஆனால்  இந்த ஓடை சரியாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் சரியாக பாய்ந்து செல்ல முடியாமல் தேங்கி நின்றது. மேலும் ஓடை பல இடங்களில் உடைந்தும் காணப்பட்டது. இதனால் இப்பகுதியில் வரும் கழிவுநீர் ஓடையில் பாய்ந்து செல்ல முடியாமல் சாலையில் பெருகி சென்றது. மேலும் இந்த இந்த கழிநீர் கசிந்து அருகில் உள்ள வீட்டிலும் பாய்ந்து சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வந்தது. இப்பகுதியில் பாய்ந்து செல்லும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர்.

குழித்துறை நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து தமிழ்முரசில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீரோடையில் காணப்பட்ட மண் மற்றும் கழிவுகளை அகற்றி சீரமைத்தனர். ஆனால் தோண்டப்பட்ட மண் ஓடையில் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதை உடனடியாக அகற்றாவிடில் மீண்டும் ஓடையில் விழுந்து பழைய நிலை ஏற்படும் சூழல் காணப்பட்டது. மண்ணை உடனடியாக அகற்ற கோரிக்கை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அந்த மண் அகற்றப்பட்டது.

Related Stories: