தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றி: திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு

சென்னை: திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், கொறடா தலைவராக முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராசா ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 37 பேர் வெற்றி  பெற்றுள்ளனர். இதில், வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர்கள் நேற்று அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றனர். இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னை  அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

கூட்டத்திற்கு திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகினார். இதில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.இந்த கூட்டத்தில், திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு, மக்களவை குழு துணைத்தலைவராக எம்.பி. கனிமொழி மற்றும் கொறடா தலைவராக முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராசா, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா, மாநிலங்களவை கொறடாவாக டி.கே.ஸ் இளங்கோவன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கூட்டத்தில் எம்பிக்கள் அனைவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் விரைவில் நடைபெறவுள்ள முதல்  மக்களவை கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். மக்களவையில் தமிழகத்தின் பிரச்சனைகளை எவ்வாறு  எதிரொலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்காக அனைத்து எம்பிக்களும் சென்னைக்கு  வந்துள்ளனர். தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் திமுக வெற்றி பெற்று, தேசிய அளவில் 3-வது கட்சியாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: