அதிமுக வசம் இருந்த 12 சட்டபேரவை தொகுதிகளை இடைத்தேர்தலில் திமுக கைப்பற்றியிருப்பது சாதனை: மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்கள் நலன் காக்கும் திமுகவின் முற்போக்கு வெற்றி பயணம் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இனி வரும் காலம் மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கப்பூர்வ அரசியலுக்கான காலமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் திமுக கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியுள்ளனர் என கூறினார். மக்களின் நம்பிக்கைகுரிய இயக்கம் திமுக தான் என்பதை ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற வைத்து வாக்காளர்கள் நிருபித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை மக்கள் எதிர்கொண்டு மக்களை மட்டுமே நம்பி திமுக கூட்டணியின் பயணம் தொடர்ந்தது என கூறினார்.

அதிமுக வசம் இருந்த 12 சட்டபேரவை தொகுதிகளை இடைத்தேர்தலில் திமுக கைப்பற்றியிருப்பது சாதனை என ஸ்டாலின் கூறினார். நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் திமுக பெறுவதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். 1971, 2004 நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது எனவும் கூறினார். தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி மக்களவைத் தொகுதிகளை வென்றுள்ளது எனவும் கூறினார். திராவட இயக்கத்தை அழிக்க எத்தனை வித்தைகள் செய்தாலும் இங்கே எடுபடாது என்பதே தமிழ்நாட்டின் தனிபெரும் தீர்ப்பு என குறிப்பிட்டார்.

Related Stories: