மோடி அமைச்சரவையில் இடம் பெறுவாரா ரவீந்திரநாத் குமார்? தீவிர முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம்

தேனி: மோடி தலைமையில் அமையும் புதிய அமைச்சரவையில் தனது மகனுக்கு பதவி பெற தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர முயற்சி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி சார்பில் தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள ஒரே எம்.பி. தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. இதனால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என பன்னீர்செல்வம் தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் முதல் முறையாக எம்.பி.யாகியுள்ள ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் தர பாஜக தயங்குவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுகவுக்கு மாநிலங்களவையில் உள்ள பலம் மற்றும் மோடியுடன் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பெறுவதற்கான முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரம் காட்டி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் இன்று மோடி தலைமையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது கட்சியினருக்கு அமைச்சர் பதவி கேட்டு வலியுறுத்த உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் எடபபாடி பழனிசாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். அப்போது தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இதற்காக அவரது மகனையும் டெல்லிக்கு அழைத்து செல்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories: