மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் மற்றும் வேப்பேரி பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மரியாதை

சென்னை: மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வருகை தந்தனர். பின்பு மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும் பேரணியாக நினைவிடம் சென்றனர். உழைப்பாளர் சிலையில் இருந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கி.வீரமணி, திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதிதாக தேர்வான எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும் மரியாதை செலுத்தினர். இன்னும் சற்று நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்றத்தின் தலைவர் யார் என தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் திமுகவுக்கு கிடைத்த பெரிய வெற்றி என கூறப்படுகிறது. வருகின்ற ஜூலை 3-ம் தேதி நந்தனம் ஒய்என்சிஎம் மைதானத்திலேயே பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, கமியூனிஸ்ட் கட்சி தலைவர்கள், கொங்கு நாடு முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பெற்ற வெற்றிகள் குறித்தும் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: