மோடிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் மற்றும் குவைத் எமிர் ஷேக் வாழ்த்து

வாஷிங்டன்:  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

மேலும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு குவைத் எமிர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல் ஜாபர் அல் சபா,குவைத் இளவரசர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா மற்றும் குவைத் பிரதமர் ஷேக் ஜபீர் அல் முபாரக் அல் ஹாமாத் அல் சபா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய உள்ளார்.  

26-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார் என தெரிகிறது. அதன்பின்னர் பாஜக தலைமையில் புதிய அரசு அமைக்க உரிமை கோருகிறார். மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: