மக்களவை தேர்தல் 2019: லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெற்றி

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க 472 தொகுதி தேவையுள்ள நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 347 தொகுதிகளில் முன்னிலையில் வகித்து வருகின்றனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மே19ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 343, காங்கிரஸ் 92, திரிணாமுல் 22, மற்றவை 85 இடங்கள் என முன்னிலை வகித்து வருகின்றன. அதில் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருவதால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையவுள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்.

அதேபோல தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்றது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் 3,01,049 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 81,713 வாக்குகளும், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பூனம் சின்ஹா 1,41,794 வாக்குகளும் பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெற்றியை தொடர்ந்து லக்னோவில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Related Stories: