கேரள மக்களவை தேர்தலில் 20-ல் 19 தொகுதிகளில் முன்னிலை பெற்று காங்கிரஸ் அதிரடி!..ராகுல் 1.45 லட்சம் வாக்குகள் முன்னிலை

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 20-இல் 19 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான இடது ஐக்கிய முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இடது ஜனநாயக முன்னணியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. எனவே, ஆளும் இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கைக்குப்பின் காங்கிரஸ் 12 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கூட்டணி 7 இடங்களிலும், திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளரும் முன்னிலையில் இருந்தனர். ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தபோது, காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதியிலும் முன்னிலை வகிக்கத் துவங்கியது. மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்தது.

தற்போதைய நிலவரப்படி ஒரு தொகுதி தவிர மற்ற 19 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதில் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி, 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அதேபோல், வடமரா தொகுதியில் கே.முரளிதரன்-26,000 வாக்குகள் முன்னிலை, திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர்-11,000 வாக்குகள் முன்னிலை, எர்னாகுளம் தொகுதியில் ஹைபி ஈடன்- 47,000 வாக்குகள் முன்னிலை, பத்தனம்திட்டா தொகுதியில் அண்டோ ஆண்டனி-47,000 வாக்குள் அதிகமாக பெற்று முன்னிலை வகித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முதல் முறையாக கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதனால் கேரளாவில் காங்கிரஸ் செல்வாக்கு அதிகரித்தது. ராகுல் காந்தி சுமார் 1.45 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருவதால், ஏறக்குறைய ராகுல் காந்தியின் வெற்றி உறுதியாகியுள்ளது.

Related Stories: