ஸ்காட்லாந்துடன் ஒருநாள் தொடர் இலங்கை அபார வெற்றி

எடின்பர்க்: ஸ்காட்லாந்து அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதி) வென்ற இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.ரேபர்ன் பிளேஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பந்துவீசியது. இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் அவிஷ்கா  பெர்னாண்டோ 74 ரன், கேப்டன் கருணரத்னே 77 ரன் விளாசினர். குசால் மெண்டிஸ் 66 ரன், திரிமன்னே 44* ரன் எடுத்தனர்.

மழை காரணமாக ஆட்டம் தடைபட்டதால், அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு 34 ஓவரில் 235 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 33.2 ஓவரில் 199 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கிராஸ் 55,  கேப்டன் கோயட்சர் 34, வாலஸ் 18, ஜார்ஜ் முன்சி 61 ரன் (42 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.இலங்கை பந்துவீச்சில் நுவன் பிரதீப் 4, லக்மல் 2, திசாரா, உடனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பிரதீப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரை  கைப்பற்றியது. உலக கோப்பை தொடரில் இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 1ம் தேதி நியூசிலாந்தை சந்திக்கிறது. அதற்கு முன்பாக கார்டிப் வேல்ஸ் ஸ்டேடியத்தில் நாளை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவுடன் மோதும்  இலங்கை அணி, மே 27ம் தேதி சவுத்தாம்ப்டனில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Related Stories: