வாவே நிறுவனம் மீதான தடை 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு

வாஷிங்டன்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் தடை உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், இந்க தடை உத்தரவு அமலை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க வர்த்தகத்துறை நேற்று அறிவித்தது. பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் விதத்தில் இந்த கால அவகாசம் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், உலகில் மிகப் பெரிய தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் வாவே நிறுவனத்தில் இருந்து 5ஜி அலைக்கற்றையை வாங்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவு கொள்கைக்கு எதிரான செயல்களில் வாவே நிறுவனம் ஈடுபட்டுள்ளதை பொருத்துக் கொள்ள முடியாது என்று வர்த்தகத் துறை குற்றஞ்சாட்டியது. இதன் விளைவாக, அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை மற்றொரு நிறுவனத்துக்கு விற்கவோ அல்லது மாற்றம் செய்யவோ அமெரிக்க வர்த்தகத்துறையின் பிஐஎஸ்ஸிடம் லைசென்ஸ் பெற வேண்டும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் எந்த ஒரு நிறுவனத்துக்கும் லைசென்ஸ் வழங்கப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தி இருந்தது. இந்த தடை உத்தரவு அமல் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது, அதன் மீதான தடையை விலக்கிக் கொண்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தடை விதிதத்து விதித்ததுதான் என்றும் வர்த்தகத் துறை விளக்கம் அளித்துள்ளது. வாவே நிறுவனம் தனது தொழில் அபிவிருத்திக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக அதற்கு அமெரிக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து தொழில் வர்த்தகம் செய்து கொள்ள தற்காலிக பொது உரிமம் வழங்கப்படும் என்று வர்த்தகத் துறை மேலும் கூறியுள்ளது.

அமெரிக்காவின் சந்தேகம்

வாவே நிறுவனத்தின் பின்னணியில் சீனாவின் ராணுவம் இருந்து இயக்குகிறது. அமெரிக்காவின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சாதனங்களின் நுணுக்கங்களை கொள்ளைப்புற வழியாக பெற்று அடுத்த நாடுகளின் தொலைத் தொடர்பு தகவல்களை சீனா பெறுகிறது என்ற சந்தேகத்தை அமெரிக்க உளவு நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது. இதனால்தான், வாவே போன் நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் திடீர் தடையை விதித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இது சிறிது சிறிதாக அதிகரித்து தற்போது பெரும் வர்த்தக போராகவே மாறியுள்ளது. இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகரித்து வருகின்றன. இந்த இரு நாடுகளின் மோதலால் மற்ற நாடுகளுக்கும் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உலகளவில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

Related Stories: