இத்தாலி ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா சாம்பியன்

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஜோகன்னா கோன்ட்டாவுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கோன்ட்டா கடும் நெருக்கடி கொடுத்தாலும், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. களிமண் தரை மைதானங்களில் விளையாடிய தொடர்களில் பிளிஸ்கோவா பெற்ற பெரிய வெற்றி இது தான். அவர் வென்ற சாம்பியன் பட்டங்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

ஜோகோவிச் - நடால் பலப்பரீட்சை: ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட நட்சத்திர வீரர்கள் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), ரபேல் நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றனர். நடால் தனது அரை இறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை (கிரீஸ்) வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் ஜோகோவிச் 6-2, 6-7 (2-7), 6-3 என்ற செட் கணக்கில் டீகோ ஷ்வார்ட்ஸ்மேனை (அர்ஜென்டினா) வென்றார். தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள ஜோகோவிச், நடால் பைனலில் மோதுவது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: