ஆப்கானிஸ்தானுக்கு 211 ரன் இலக்கு

பெல்பாஸ்ட்: அயர்லாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு 211 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டோர்மான்ட், சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது. அயர்லாந்து அணி 48.5 ஓவரில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் அதிகபட்சமாக 71 ரன் (94 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். கேப்டன் போர்ட்டர்பீல்டு 53 ரன் (83 பந்து, 6 பவுண்டரி), கெவின் ஓ பிரையன் 32 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் தவ்லத் ஸத்ரன், அப்தாப் ஆலம் தலா 3 விக்கெட், ரஷித் கான் 2, குல்பாதின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 12.2 ஓவரில் 22 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

Related Stories: