இஸ்ரேலின் பெரேஷிட் என்னும் விண்கலம் மோதிய பகுதியின் படத்தை வெளியிட்டது நாசா

கலிபோர்னியா: இஸ்ரேல் நிலவுக்கு அனுப்பிய விண்கலம், நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான இடத்தை நாசா கண்டறிந்துள்ளது. நிலவில் தரையிறங்கி புகைப்படங்கள் எடுப்பதோடு, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேல் பெரேஷிட் என்னும் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவின் மேற்பகுதியில் மோதி வெடித்தது. இந்நிலையில் இந்த விபத்து ஏற்பட்ட இடத்தை நாசாவின் விண்கலம் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் சுற்று பாதையில் உள்ள நாசாவின் லூனர்  ரெங்கனைசன் ஆர்பிட்டர் நிலவின் மேற்பரப்பில் உள்ள விபத்து ஏற்பட்ட இடத்தை புகைப்படம் எடுத்துள்ளது. அதே இடத்தில் 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டு உள்ளது. இந்த புகைப்படம் நிலவின் மேற்பரப்பிலிருந்து  90 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து  எடுக்கப்பட்டது.

Related Stories: