கோடை மழை கைகொடுக்காததால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அனல் காற்று

* மக்கள் வீட்டிலேயே முடக்கம்

* கோடை மழை கைகொடுக்காததால் நாளுக்கு நாள் அனல் காற்று வீசுவது அதிகரிப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

தமிழகத்தில்  கடந்த 3 மாதத்திற்கு மழை பெய்ய வில்லை. தொடர்ந்து வெயில் தாக்கம் நாளுக்கு  நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்து  வருகிறது. இந் நிலையில் தற்போது கத்தரி வெயில் தொடங்கிய நிலையில் வெயில்  100 டிகிரியை தாண்டி அடிக்கிறது. சில நேரத்தில் வெப்ப காற்று வீசுகிறது. பகல்  நேரத்தில் மரத்து நிழலில் நின்றாலும் அனல் வீசுகிறது.

ஈரப்பதம் இல்லாத  மிக, மிக குறை வாக காற்று விசுவதால் வீடுகளில் மின் விசிறி சுற்றினாலும்  காற்று உடலில் படுவதை உணர முடியாத அளவிற்கு காற்று வீசுகிறது. இரவு  நேரத்திலும் காற்று அடிக்காததால் இரவில் இரண்டு மின் விசிறி சுற்றினாலும்  போதிய காற்று கிடைப்பதில்லை. வீடுகளில் வீட்டின் மேல் வைக் கப் பட்டுள்ள  நீர் தேக்க தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீர் வெண் நீராக மாறி விடுகிறது.  வெயிலினால் கடைகளில் எந்த நேரமும் வெப்பமாகவே உள்ளதால் வர்த்தகர் பெரும்  அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சீலிங் பேன் கட்டிடத்தின் வெப்பத்தை  அப்படியே கீழே இறக்குவதால் மின்விசிறி போட்டால் அனல் காற்றாக உள்ளது.  டேபில் பேன் போட்டாலும் ஈரப்பதம் இல்லாத காற்றால் அனல் காற்றாக வீசுகிறது.

பொதுவாக  கூறை வீடுகள் வெப்பம் குறைந்து குளிச்சியான நிலை காணப்படும். தற்போது  வெப்ப காற்றாக உள்ளதால் அந்த வீடுகளும் வெப்பமாக உள்ளது. தற்போது கூறை  மற்றும் ஓட்டு வீடுகள் குறைந்து காங்கிரட் வீடாக மாறியுள்ளதால் அதிக  வெயில், பகல், இரவு நேரத்தில் வெப்பமாக உள்ளதாலும், காற்று வீசாததாலும்  காங்கிரீட் வீடுகளில் அதிக வெப்பம் தெரிகிறது.

தற்போது வங்க  கடலில்உருவான பானி புயல் ஈரப்பதத்தை உறிஞ்சியதால் தற்போது ஈரப்பதம் இல்லாத  அதிக வெப்பம் உள்ள காற்றாக உள்ளதால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி  வருகின்றனர். மேலும் வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் பெரும் அவதிக்கு  உள்ளாகி வீட்டிலேயே முடங்கினர். மேலும் எந்த நேரமும் வியர்வையாக  உள்ளதால் சளி, இருமல் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில்  அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலத்தில் மழை பெய்து வெப்பத்தை  தனித்தது. இந்த ஆண்டு கடந்த 3 மாதத்திற்கு மேல் மழை பெய்யாததால் நிலத்தடி  நீர் குறைந்தும், ஈரப்பதம் இல்லாத வறண்ட சூழல் உள்ளது. தற்போது மழை  பெய்தால் தான் வெப்பக்காற்று நீங்கி குளிர்ச்சி நிலவும் என பொதுமக்கள் மழை  வேண்டி வருண பகவானை வணங்கி வருகின்றனர்.

Related Stories: