இதயநோய் மாரடைப்பை தடுக்கும் மாம்பழம்

பொதுவாக மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பலவகைகள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால் உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா?... பலர் மாம்பழம் சாப்பிட்டால் உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்று சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். உண்மையில் மாம்பழம் சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பம் தணியத்தான் செய்யும். அதுமட்டுமின்றி மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் பலர் சாப்பிட மாட்டார்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால் அதில் உள்ள இனிப்பு சுவையால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து விடுமோ என்று தான். ஆனால் அதுவும் பொய்தான்.

மாம்பழம் இதய நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. மாம்பழத்தின் நன்மைகள் சிலவற்றைப் பட்டியலிட்டு பார்த் தால் மாம்பழம் ஒரு அற்புதமான உணவு பொருளாக நமக்கு தெரியும். இனிமேல் மாம்பழத்தை ரசித்து சாப்பிடுங்கள். இதில் தனித்தனியாக பிரித்து பார்த்தால் ஒவ்வொரு மருத்துவ குணத்திற்கும் ஏற்றது தான் மாம்பழம்.

மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்று நோயை எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தை போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார் வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம்.

இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால் இதனை அதிகம் சாப்பிட்டால் தெளி வாக கண்பார்வையை பெறலாம். மாம்பழத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது.எனவே இதனை சாப்பிட்டால் உடலில் இருக்கும் கெட்ட கொல ஸ்ட்ரால் இதயம் மற்றும் ரத்தக் குழாய்களில் தங்கி உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

மாம்பழம் இனிப்பாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது. அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ள முடியும். மாம்பழம் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. பருக்களை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் கோடையில் மாம்பழ பேஷியல் மிகவும் பிரபலமானது. ஏனெனில் அவை உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

பொதுவாக வைட்டமின் ஈ காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவும்.

இத்தகைய வைட்டமின் ஈ மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது. எனவே இதனை அதிகம் சாப்பிடுவது தாம்பத்ய உறவிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும். மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும் இதனை சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால் இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும்.

இப்படி மருத்துவ குணத்திற்கும் , மாம்பழத்திற்கும் உள்ள நெருக்கத்தை பற்றி கூறிக்கொண்டே செல்லலாம். மொத்தத்தில் மாம்பழத்தின் சுவையும், அதன் வாசனையும் எவ்வளவு அற்புதமோ அந்தளவில் உடல் ஆரோக்கியத்துக்கும் அற்புத மான உணவு வகையில் சிறந்தது மாம்பழம்.

Related Stories: