சிப்பி காளானில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி? வேளாண். அறிவியல் விஞ்ஞானிகள் ஆலோசனை

காளான் வகைகளை மக்கள் அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கி விட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் தருவதால் தான். மேலும் அதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டிஇ கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. காளான் ரகங்கள் நம் நாட்டின் கால நிலைக்கு உகந்தது. வெள்ளை சிப்பு(கோ 1இ சாம்பல் சிப்பு எம்.டி.யு 2இ ஏகே.பி. 2(பால்காளான்)ஊட்டி 1 மற்றும் ஊட்டி 2 (மொட்டுகாளான்) ஆகிய காளான் வகைகள் தமிழ்நாட்டிற்கு ஏற்றவையாகும். சிப்பிக் காளான் வளர்ப்பு குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜேஷ்குமார், ராமசுப்ரமணியன் கூறியது: சிப்பி காளான் வளர்ப்புக்கு தென்னங் கீற்று வேய்ந்த குடிலை பயன்படுத்தலாம். குடிலின் அளவு தினசரி நாம் உற்பத்தி செய்யும் காளான் அளவை பொருத்து அமைய வேண்டும். நாளொன்றுக்கு சுமார் 20 கிலோ காளான் உற்பத்தி செய்வதாக இருந்தால் சுமார் 300 ச.மீ அளவுக்குக் குடிலின் அளவு இருக்க வேண்டும்.

காளான் குடிலை இரண்டாக தடுத்து ஒன்றை வித்து பரவும் அறையாகவும், மற்றொன்றைக் காளான் தோன்றும் அறையாகவும் பயன்படுத்தலாம். வித்துப்பரவும் அறையின் வெப்ப நிலை 20ரூ30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். காளான் தோன்றும் அறையில் 23- 25 டிகிரி செல்சி யஸ் வெப்பநிலையும் காற்றின் ஈரபதம் 85 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். அறையில் நல்ல காற்றோட்டமும் தேவையான அளவு வெளிச்சமும் இருக்க வேண்டும். வியாபார ரீதியில் காளான் உற்பத்தி செய்ய நெல் வைக்கோல் சிறந்தது. படுக்கைகள் தயாரிக்கும் முன் வைக் கோலை பதப்படுத்துவது மிகவும் அவசியம். கொதிக்கும் நீரில் பதப்படுத்துதல் நன்று உலர்ந்த வைக்கோலை 5 செ.மீட்டர் அளவுள்ள துண்டுகளாக வெட்டித் தண்ணீரில் 4- 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த வைக்கோல் துண்டுகளை சுமார் 1 மணிநேரம் 8 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில் தண்ணீைரில் அமிழ்ந்திருக்மாறு செய்ய வேண்டும். நீராவியில் பதப்படுத்தி ஊற வைத்த வைக் கோல் துண்டுகளை ஆட்டோளேவ் போன்று வடிவமைக்கப்பட்ட கொதிகலன்களில் நீராவியினால் சுமார் 45- 60 நிமிடங்கள் பதப்படுத்தலாம். பதப்படுத்திய வைக்கோல் ஈரப்பதம் சுமார் 65 சதவிகிதம் இருக்கும்படி உலர்த்த வேண்டும். ஒரு பிடி வைக்கோல் துண்டுகளை கையிலெடுத்து இறுக்கி பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. அதே சமயம் வைக்கோல் ஈரமாகவும் இருக்க வேண்டும். காளான் வித்திடுதலான சுமார் 60க்கு 30 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் அடுக்குமுறையில் வித்திட்டு உருளைப்படுக்கைகள் தயாரிக்க வேண்டும்.

ஒரு காளான் வித்துப் புட்டியைப் பயன்படுத்தி இரண்டு படுக்கைகள் வரை தயாரிக்கலாம். முதலில் பாலித்தீன் பையின் அடிப்பகுதியைச் சணல் நூலால் கட்டி பையை திறந்து பதப்படுத்திய வைக்கோல் துண்டுகளை சுமார் 5 செ.மீ உயரத்திற்கு நிரப்ப வேண்டும். அதன் மேற்பரப்பு முழுவதும் சுமார் 25 கிராம் அளவிற்கு காளான் வித்துகளைத் தூவ வேண்டும். அதன் மேல் 10 செ.மீ அளவிற்கு வைக்கோல் துண்டுகளை இரண்டாவது அடுக்காக நிரப்பி அதன் மேற்பகுதியில் 25 கிராம் அளவிற்கு வித்துகளைத் தூவ வேண்டும். அதே போல் மூன்றா வது மற்றும் நான்காவது அடுக்குகளைத் தயார் செய்ய வேண்டும்.பின் 10- 15 துளைகளை இட வேண்டும். தயாரித்த உருளைப் படுக்கைகளைப் பூசண இழை பரவும் அறையில் பல அடுக்குகளாக தொங்க விட வேண்டும். படுக்கை முழுவதும் பூசண இழைகள் முழுமையாகப் பரவ சுமார் 15 முதல் 20 நாட்களாகும். காளான் பூசணம் முழுமையாகப் பரவிய பின் மூன்று அல்லது நான்கு நாட்களில் காளான் மொட்டுகள் படுக்கையின் மேற்பரப்பில் தோன்றும். காளான் தோன்றும் அறையில் வெப்பநிலை 23 முதல் 25 டிகிரி செல்சியஸ் ஈரப்பதம் 85 முதல் 90 சதவீதம் இருப்பது நல்லது. மொட்டுகள் தோன்றி இரண்டு மூன்று நாட்களில் காளான்கள் முழு வளர்ச்சியடைகின்றன. முதல் அறுவடை முடிந்தவுடன் படுக்கையில் மேலும் 10 துளைகள் இட்டு மீண்டும் தண்ணீர் தெளித்து வந்தால் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக காளான் தோன்றும். இம்முறையை விவசாயிகள் பின்பற்றி மூன்று முறை காளான் அறுவடை செய்து அதிக லாபம் பெறலாம்.

காளான் பூசணம் முழுமையாகப் பரவிய பின் மூன்று அல்லது நான்கு நாட்களில் காளான் மொட்டுகள் படுக்கையின் மேற்பரப்பில் தோன்றும். காளான் தோன்றும் அறையில் வெப்பநிலை 23 முதல் 25 டிகிரி செல்சியஸ் ஈரப்பதம் 85 முதல் 90 சதவீதம் இருப்பது நல்லது.

முதல் அறுவடை முடிந்தவுடன் படுக்கையில் மேலும் 10 துளைகள் இட்டு மீண்டும் தண்ணீர் தெளித்து வந்தால் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக காளான் தோன்றும். இம்முறையை விவசாயிகள் பின்பற்றி மூன்று முறை காளான் அறுவடை செய்து அதிக லாபம் பெறலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: