நாட்டின் நான்காவது தூணான பத்திரிக்கை சுதந்திர நாள் இன்று...

உலக பத்திரிக்கை சுதந்திர நாளாக ஆண்டுதோறும் மே 3-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஊடக சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும். சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரம் ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. ஊடக சுதந்திரத்தை பரப்பும் நோக்கிலும், கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் இந்த நாளை உலக பத்திரிக்கை சுதந்திர நாளாக அறிவித்தது.

இந்தியாவில் முதன் முதலில் பத்திரிக்கைகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இவர் 1781 ஆம் ஆண்டு இவர் ‘வங்காள் கெஜட்’ என்ற பத்திரிக்கைக்கு தொல்லை கொடுத்து, அதன் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தார். இதே போல் பல்வேறு கட்டுபாடுகை விதித்திருந்தார். 1818-ல் ஹேஸ்டிங்ஸ் பிரபு, பத்திரிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான விதிமுறையை சிறிது தளர்த்தினார். ஆனாலும் பத்திரிக்கைக்கான முழு சுதந்திரம் கிடைக்காமல் இருந்து வந்தது.

பின்னர் 1975-ம் ஆண்டு நெருக்கடி காலப் பிரகடனத்தின் போது வெளியான ஆட்சேபணைக்கு உரிய விவகாரங்களை வெளியிடுவதைத் தடை செய்யும் சட்டம் 1977-ம் ஆண்டு நீக்கப்பட்டது. 1984-ம் ஆண்டு உரிமைப் பதிவுத் திருத்தச் சட்டமும், அவதூறு சட்டமும் அமல்படுத்தப்பட்டன. தற்போது பத்திரிக்கைச் சுதந்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வரைமுறைப்படுத்தும் மத்திய அரசின் பத்திரிக்கைச் சட்டம் எதுவும் இல்லை என்றாலும் சில சமயங்களில் தேவையில்லாமல் பத்திரிக்கைகள் மீது வழக்கு போடுவது நடக்கத்தான் செய்கிறது.

ஊடக சுதந்திரத்துக்காக பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இந்த விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: