முட்டை சைவமா, அசைவமா?

பால் உற்பத்தியில் மட்டுமல்லாமல் வெண்மைப்புரட்சியின் மற்றொரு அங்கமான முட்டை உற்பத்தியிலும் நாடு மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. முட்டை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு இரண்டரை கோடி முட்டைகள் கோழி பண்ணைகளிலிருந்து உற்பத்தி ஆகிறது.

இந்திய மருத்துவக்கழக ஆலோசனையின்படி தனி நபர் முட்டை உண்ணும் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு 180 ஆகும். ஆனால் நம் நாட்டில் தற்போது தனிநபர் முட்டை உண்ணும் எண்ணிக்கை 45.  இந்தக் குறைபாடுகளுக்கு காரணம் முட்டை உண்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பது தான். அசைவ உணவு வகைகளில் முட்டையை கருதுவது தான் இந்த குறைபாட்டுக்கு காரணம். முட்டை சைவமா, அசைவமா என்பது குறித்து கால்நடை பராமரிப்பு துறையின் முன்னாள் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:

சேவல் இல்லாமல் கோழி முட்டை இடுமா என்ற கேள்வியை கேட்டால் பாமரர் முதல் படித்தவர் வரை இடாது என்றே சொல்வார்கள். கோழி முட்டை இட சேவல்கள் தேவை இல்லை. ஆனால் கோழிகள் இடும் முட்டைகள் குஞ்சு பொறிக்க சேவல்கள் அவசியம் தேவை.

கோழி முட்டையை பலரும் ஒரு விதையாக கருதுகின்றனர். செடி கொடிகளின் விதை இனச் சேர்க்கையால் உருவானவை. கோழி முட்டை இடுவது இனச்சேர்க்கையாலும்  ஏற்படும். இனச் சேர்க்கை இல்லாமலும் கோழிகள் முட்டை இடும். முட்டை என்பது ஒரு பெண் செல். விலங்கினங்களில் இப்பெண் செல்  கண்ணுக்குத் தெரியாது. ஆனால் பறவை இனங்களில் கண்ணால் பார்க்கக் கூடிய அளவில் வெளியேறுகிறது. ஆகவே சேவல் சேர்ந்தாலும், சேராவிட்டாலும் இந்த முட்டைகளை கோழிகள் இட்டுக் கொடுக்கத்தான் இருக்கும். எனவே தான் கோழிப்பண்ணைகளில் சேவல் இல்லாமல் கோழிகள் இடும் முட்டை குஞ்சு பொரிக்காது. இவற்றில் உயிர் கரு கிடையாது.

ஆகையால் இக்கோழிகள் இடும் முட்டைகள் சைவ முட்டைகளே. பாலை  சைவ உணவாக கருதுபவர்கள் முட்டையையும் சைவமாக கருதலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: