குழந்தைகளை எந்த வயதில் பள்ளிக்கு அனுப்பலாம்?

கடும் போட்டிகள், சவால்கள் நிறைந்த இந்த உலகத்தில், குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பள்ளியில் சேர்க்க அட்மிஷன் வாங்கி விடுகிறார்கள். இரண்டரை வயது குழந்தைகளுக்கு கூட, லட்சக்கணக்கில் பள்ளிக் கட்டணம் இருக்கிறது. ஆனால் என்ன தான் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் பெற்றோர்கள் எதற் கும் அசருவதாக இல்லை. கடனை வாங்கியாவது பள்ளிக் கட்டணத்தை செலுத்தி விடுகிறார்கள்.

இரண்டரை வயது:

பல பள்ளிகள், இரண்டரை வயது குழந்தைகளை கூட பள்ளியில் சேர்த்துக் கொள் கின்றன.ஆனால் இந்த வயது உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாராகி விட்டது என்பதற்கான அர்த்தம் அல்ல.

பெற்றோர்களின் வேகம்:

நிறைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிட ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் ஆய்வாளர்கள் மிகச்சிறிய வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தவறு என கூறுகின்றனர்.

சரியான வயது எது?

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க சரியான வயது 6 என்றும், ஏழு வயதில் தான் குழந்தைகள் எதையும் புரிந்து கொண்டு செயல்படும் திறனை பெறுவார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

உளவியல் மருத்துவர்கள்:

உளவியல் மருத்துவர்கள் சுயக்கட்டுப்பாடு என்பது முக்கியமான ஒன்று இது குழந்தைகளுக்கு ஏழு வயதில் தான் வரும். மேலும் இந்த வயதில் தான் குழந்தை களுக்கு கவனம் மற்றும் சிறந்த செயல்பாடுகள் உண்டாகும் என்று கூறுகின்றனர்.

மனநிலை மாற்றம்:

குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. சில குழந்தைகள் தங்க ளது ஏழு வயதிலும் சிலர், பதினொரு வயதிலும் மன அழுத்தங்களுக்கு ஆளாகி ன்றார்களாம்.

பாலர் பாடசாலை ட்ரெண்ட்:

பால்மனம் மாறாத இரண்டரை வயதில் குழந்தைகளை பாலர் பாடசாலையில் சேர்ப்பது இன்றைய ட்ரெண்ட் ஆகி விட்டது. அந்த வகையில் பெற்றோர் வீட்டு சூழலு க்கு மட்டுமே. பழக்கப்பட்டுள்ள உங்கள் குழந்தை புதியதொரு சூழலுக்கு செல்லும் போது பலவிதமான சவால்களுக்கும் முகம் கொடுக்க நேரிடும்.

அடிப்படை விஷயங்கள்:

பள்ளி செல்லும் முன் நம் குழந்தைகளுக்கு சில அடிப்படை விஷயங்களை கற்றுக் கொடுப்பது அவசியம்.அத்துடன் பெற்றோரும் சில விஷயங்களை கருத்திற் கொள்ள வேண்டும்.வீட்டுச் சூழலுக்கு மட்டும் பழக்கப்பட்ட குழந்தைகளை இடையிடையே உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு அழைத்து சென்று சில மணி நேரம் அவர்களுடன் பழக விட வேண்டும்.

பழக்கவழக்கங்கள்:

பாலர் பாடசாலை வீட்டிற்கு அருகில் தேர்வு செய்வது சிறப்பானது. நெடுந்தூர பயணம், களைப்பு என்பன குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு சிறப்பானதல்ல. சில குழந்தைகள் அதிக அடம் பிடிப்பது, பெற்றோர்களை அடிப்பது, பொருட்களை தூக்கி எறிவது போன்ற பழக்க வழக்கங்கள் கொண்டிருக்கும். அதனை சிறு வயதிலே சரி செய்யாவிட்டால் அது பெற்றோருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் அவமானத்தை ஏற்படுத்தலாம்.

தாமே உணவை உட்கொள்ள உணவுக்கு முன் பின் கை கழுவுதல், தாமே தனியாக சிறுநீர் மலம் கழிக்கவும், சுத்தம் செய்து கொள்ளவும் பழக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் பள்ளி செல்ல முடியாது என அழுவது சகஜம். இதே நிலை சில மாதங்கள் சென்றும் தொடரும் எனில், அதனை குறித்து பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளுடன் பேசி விசாரிக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: