கந்து வட்டி கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் சூளை பள்ளத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (54). கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியில் உள்ள ஏலச்சீட்டு மற்றும் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் திரிலோகசுந்தரி (45)  என்பவரிடம் கடந்த  ஆண்டு வட்டிக்கு ரூ.60 ஆயிரம் வாங்கினார். சரியாக வேலை இல்லாததால் பணத்தை திருப்பி தர முடியாமல் கோவிந்தம்மாள் தவித்து வந்துள்ளார். பணம் கொடுத்த திரிலோக சுந்தரி  அடிக்கடி வீட்டிற்கு  வந்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதற்கிடையே, கோவிந்தம்மாள் திரிலோக சுந்தரிக்கு தெரியாமல் வீட்டை காலி செய்துவிட்டு, வடபழனி குமரன் காலனியில் குடியேறியுள்ளார். பணம் கொடுத்த திரிலோக சுந்தரியை கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் தேடி  கடைசியாக கோவிந்தம்மாள் வசித்த வீட்டை கண்டுபிடித்து அப்பகுதி மக்கள் முன்னிலையில் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

பின்னர் கோவிந்தம்மாள் ேநற்று முன்தினம் இரவு சம்பவம் குறித்து திரிலோக சுந்தரியை நேரில் சந்தித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்கனவே கொண்டு வந்த  மண்ணெண்ணெயை கோவிந்தம்மாள் எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் கோவிந்தம்மாள் அலறி துடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அருகில் இருந்த பொதுமக்கள்  கோவிந்தம்மாள் மீதுள்ள தீயை அணைத்தனர்.தகவலறிந்து வந்த எம்ஜிஆர் நகர் போலீசார் கோவிந்தம்மாளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்காயங்களுடன் கோவிந்தம்மாள் உயிருக்கு போராடி வருகிறார்.போலீசார் திரிலோக சுந்தரி மீது வழக்கு பதிவு செய்து கைது ெசய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: