புழல் காவாங்கரை பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பெண்கள் ஆர்ப்பாட்டம்

புழல்: புழல், காவாங்கரை பகுதியில் தனியார் நிறுவன செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புழல், காவாங்கரை திருநீலகண்ட நகர் 4வது தெருவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு செல்போன் டவர் அமைந்தால் கதிர்வீச்சு காரணமாக 2  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 60 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் செல்போன் டவர் அமைக்கப்பட உள்ள இடத்தில் நேற்று காலை திரண்டனர். பின்னர் திடீரென அவர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். தகவலறிந்து புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்று  போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஒரு மணிநேரம் பரபரப்பு நிலவியது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க தேவையில்லை. இதனால் எங்களூக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே டவர் அமைப்பதை தடுக்காவிட்டால்  பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: