விதிமீறி இயக்கப்பட்ட 23 பைக்-டாக்சிகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் பொதுமக்களை கவரும் விதமாக ‘பைக்-டாக்சி’ முறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக டாக்சி,  ஆட்டோ ஆகியவற்றில் செல்லும்போது காலதாமதம் ஏற்படும். ஆனால், இந்த முறையில் பயணிக்கும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக பயணிக்க முடியும். இதற்காக தனியார் நிறுவனங்கள் பிரத்தியேக செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. அதை மொபைலில் பதிவிறக்கம் செய்து, பைக்கை புக் செய்து கொள்ளலாம். அவ்வாறு பயணம் செய்யும் போது ஒரு கி.மீ.,க்கு ரூ.3 வீதம்  கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

ஆனால், சம்பந்தப்பட்ட நடைமுறையில் வாகனங்களை இயக்குவது சட்டவிரோதமானது என போக்குவரத்துத்துறை ஆணையரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை மதிக்காமல்  ‘பைக்-டாக்சி’ இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வாடகைக்கு பயன்படுத்தப்படும் டூவீலர்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று சென்னை தெற்கு வட்டார போக்குவரத்து  அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 23 ‘பைக்-டாக்சி’கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: