நீலகிரி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வேட்பாளர் அதிருப்தியில் அதிமுகவினர்

அதிமுக., வேட்பாளராக திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த  தியாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்ட அதிமுக.,வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். நீலகிரி தனி தொகுதியில், திமுக சார்பில் மூன்றாவது முறையாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அவிநாசி பகுதியை சேர்ந்த தியாகராஜன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இவர் பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்பி.. மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக.,வினர் இந்த அறிவிப்பு வந்தவுடனே அப்செட் ஆகிவிட்டனர். காரணம், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மொத்தம்  23 பேர் விருப்பமனு செய்திருந்தனர். இதில், குறிப்பிடும் வகையில் உள்ளவர்கள் குன்னூர் நகராட்சி தலைவராக இருந்த சரவணகுமார், பாஜ.,வில் இருந்து விலகி வந்த குருமூர்த்தி, தற்போது எம்பி.,யாக உள்ள கோபாலகிருஷ்ணன் ஆகியோர். மேலும், ஜெகதளா  ஊராட்சி தலைவர் உஷா என்ற பெண்ணின் பெயரும் அடிப்பட்டது.

ஆனால், இவர்கள் யாருக்கும் சீட் கொடுக்காமல் அவிநாசி பகுதியை சேர்ந்தவரும் நீலகிரி மாவட்டத்தில் அறிமுகமே இல்லாதவருக்கு சீட் கொடுத்துள்ளது  உள்ளூர் அதிமுக.,வினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், நீலகிரி தொகுதியை பொறுத்தவரை ராசா பிரபலமானவர். அவருக்கு எதிராக ஒருவர் களம் இறங்க வேண்டும் எனில், அவருக்கு ஈடுெகாடுக்கும் வகையில் இருக்க வேண்டும். கடந்த  முறை கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார் என்றால், அது ஜெயலலிதா பிரசாரம் மற்றும் அம்மாவிற்காக விழுந்த ஓட்டு. ஆனால், தற்போது அப்படி இல்லை. கட்சி பிரிந்து கிடக்கிறது. இச்சமயத்தில் தொகுதிக்கு அறிமுகம்  இல்லாத ஒருவருக்கு சீட் ெகாடுத்துள்ளது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: