தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் முறைகேடுகளை போட்டு கொடுத்தால் விருதுக்கு பரிந்துரை: அதிகாரிகள் தகவல்

மக்களவை தேர்தலையொட்டி கண்காணிப்பு குழுவின் முறைகேடுகளை போட்டு கொடுப்பவர்களின் பெயர்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள் வழங்குவதை தடுக்க நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கண்காணிப்பு  குழுவினருடன் போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிகப்படியான பணம் சிக்கினால் கண்காணிப்பு குழுவினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, கண்காணிப்பு குழுவில் உளவாளிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,  முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘தேர்தலையொட்டி கண்காணிப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குழுவிலும், நம்பிக்கையான 2 உளவாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணம், பரிசுப்பொருட்கள்  சிக்கினால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு, தகவல் தெரிவிக்காமல் பணம் மற்றும் பரிசு பொருட்களை பங்குபோட நினைத்தால் குழுவில் உள்ள உளவாளிகள் ரகசியமாக தகவல்  தெரிவிப்பார்கள். தகவல் தெரிவிப்பவர்களின் நேர்மையை பாராட்டி, அவர்களது பெயர்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். அதேபோல், குழுவில் உள்ள மற்றவர்கள் மீது நடவடிக்கை பாயும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: