சாரி பாஸ்... நாங்க ஆட்டைக்கு வரல

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) அறிவித்துள்ளது. தேர்தலில் தேசியவாத காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க அக்கட்சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி நான்கு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று எம்.என்.எஸ். கட்சி அறிவித்துள்ளது. தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை அதிகாரப்பூர்வமாக எம்.என்.எஸ். இதுவரை அறிவிக்கவில்லை.

எனினும் ராஜ்தாக்கரே தமது ஆதரவை சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி அரசுக்கு எதிராக மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பாஜ.வுடன் சிவசேனா கூட்டணி அமைத்திருப்பது குறித்தும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே இதை குறிவைத்து ராஜ்தாக்கரே பிரசாரம் செய்வார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: