மத்திய அமைச்சர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

ஜார்கண்டில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மீது தேர்தல் விதிமுறையை மீறியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 29ம் தேதி முதல் 4 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளது. அனைத்து காவல் நிலையங்களும் தேர்தல் நடத்தை விதி மீறப்படுகின்றதா என கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ராஞ்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா கலந்து கொண்டார். மாணவர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா, “மேலும் 5 ஆண்டுகளுக்கு உங்களது ஆசிர்வாதம் தேவை” என்று கூறினார்.  இந்த நிகழ்ச்சி தொடர்பாக, ஜெய்ந்த் சின்கா மீது ராஞ்சியில் உள்ள கெல்கான் காவல் நிலையத்தில் தேர்தல் விதி மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: